கோவில்பட்டியில் உள்ள காவல்நிலையங்களில் மாவட்ட எஸ்.பி. ஆய்வு..

கோவில்பட்டி மேற்கு மற்றும் மகளிர் காவல் நிலையங்களில் மாவட்ட எஸ்.பி. முரளி ராம்பா ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையங்களில் உள்ள பதிவேடுகள் உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு மேற்கொண்டார். நிலுவையில் உள்ள வழக்குகள், குற்றங்களை தடுப்பதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் காவல்நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டினார். தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் முரளி ராம்பா செய்தியாளர்களிடம் கூறும்போது, கோவில்பட்டி நகரப்பகுதியில் உள்ள தெருக்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த தொண்டு நிறுவனத்தினர் முன் வர வேண்டும். அதே போல், வசதி படைத்தவர்கள் தங்களின் வீடுகளில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும். அதே போல், கோவில்பட்டி புதுக்கிராமம் மற்றும அண்ணா பேருந்துநிலையம் ஆகியவற்றில் உள்ள புறக்காவல் நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்பட ஏற்பாடு செய்யப்படும். கோவில்பட்டி உப கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் காவலர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளனர். கோவில்பட்டி நகர பகுதியில் போக்குவரத்து காவலர்களும் அதிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..