தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (22.11.2018) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திப் நந்தூரி கலந்து கொண்டு விவசாயிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் அக்டோபர் – 2018 மாதம் வரை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 180 மனுக்களில் வேளாண்மை சார்ந்த 82 மனுக்களும், பிறதுறைகளை சார்ந்த 98 மனுக்களுக்கும் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் விவசாயிகளுக்கு பதில்கள் அளிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பான மழையளவு 662.20 மி.மீ, நவம்பர் மாதம் முடிய இயல்பான மழையளவு 568.20 மி.மீ ஆகும். 19.11.2018 வரை 499.74 மி.மீ மழை கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும் 2016 – 2017-ல் பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ததில் நெலII பயிருக்கு 621 விவசாயிகளுக்கு ரூ.2.37 கோடியும், நெல்III பயிருக்கு 930 விவசாயிகளுக்கு ரூ.0.748 கோடியும், உளுந்து பயிருக்கு 39,513 விவசாயிகளுக்கு ரூ.110.39 கோடியும், பாசி பயிறுக்கு 23,766 விவசாயிகளுக்கு ரூ.59.38 கோடியும், மக்காச்சோளம் பயிருக்கு 22,193 விவசாயிகளுக்கு ரூ.72.40 கோடியும் மற்றும் மிளகாய் பயிருக்கு 8,490 விவசாயிகளுக்கு ரூ.32.60 கோடியும் விவசாயிகளின் வங்கி கணக்கில் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மேலும் கம்பு பயிருக்கு 919 விவசாயிகளுக்கு ரூ.1.64 கோடியும்ää நிலக்கடலை பயிருக்கு 140 விவசாயிகளுக்கு ரூ.0.39 கோடியும் மற்றும் வெங்காயம் பயிருக்கு 4,951 விவசாயிகளுக்கு ரூ.5.13 கோடியும் காப்பீட்டு தொகை வரப்பெற்று பயனாளிகளின் வங்கி கணக்கில் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. சோளம், பருத்தி, சசூரியகாந்தி எள் மற்றும் வாழை உள்ளிட்ட இதர பயிர்களுக்கு காப்பீடு தொகை விரைவில் கிடைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் காரீப் பருவத்தில் நெல்II மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கு 61 நபர்கள் 64.105 எக்டர் நிலப்பரப்பிற்கும், நெல்II பயிருக்கு 4,997 நபர்கள் 2490.6 எக்டர் நிலப்பரப்பிற்கும் மற்றும் நெல் (நவரை/கோடை) மற்றும் இதர ரபி பருவ பயிருக்கு 91,928 நபர்கள் 58391.5 எக்டர் நிலப்பரப்பிற்கும் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.

2018 – 2019ம் ஆண்டிற்கான பிசான பருவத்தில் நெல் II பயிருக்கு 660 நபர்கள் 213.13 எக்டர் நிலப்பரப்பிற்கு பயிர் காப்பீடு செய்துள்ளனர். மேலும் நடப்பு 2018- 19ம் ஆண்டிற்கான பிசான பருவத்தில் நெல் பயிருக்கு பயிர் காப்பீட்டு பிரீமியம் ஏக்கருக்கு ரூ.368/- ஆகும். நெல்க்குப் பிரிமீயம் செலுத்துவதற்கு 30.11.2018-ம் கடைசி நாளாகும். பின்பருவ பயிரான நெல் ஐஐஐ பயிருக்கு பயிர் காப்பீட்டு பிரீமியம் ஏக்கருக்கு ரூ.368/- ஆகும். நெல்III க்குப் பிரிமீயம் செலுத்துவதற்கு 15.02.2019-ம் கடைசி நாளாகும். எனவே, விவசாய பெருமக்கள் பயிர்க் காப்பீட்டுக் கட்டணத்தை (பிரீமியம்) உரிய கால கெடுவுக்குள் தங்கள் பகுதியிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வணிக வங்கிகளிலோ, பொது சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ செலுத்தி பாரத பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயனடைய வேண்டும். உடன்குடி பகுதியில் கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரிப்பில் பல்வேறு வகையில் சீனி கலப்படம் செய்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே இப்பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் மூலம் உரிய ஆய்வுகள் செய்யப்பட்டு கலப்படம் செய்பவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மக்காச்சோளம் காப்பீடு செய்துள்ள சில விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை விரைந்து பெற்று வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மு.வீரப்பன், தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.சிம்ரான் ஜித் சிங் கலோன், உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.அனு இ.ஆ.ப., இணை இயக்குநர் (பொ) (வேளாண்மைத்துறை) திருமதி தமிழ்மலர், இணை பதிவாளர் (கூட்டுறவுத்துறை) திரு.அருளரசு, கோவில்பட்டி கோட்டாட்சியர் திருமதி விஜயா, திருச்செந்தூர் கோட்டாட்சியர் திரு.கோவிந்தராசு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.சு.பாலசுப்பிரமணியன், துணை இயக்குநர் (வேளாண் விற்பனை) திருமதி சாந்திராணி, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் திரு.சொர்ணகுமார் மற்றும் அலுவலர்கள். விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..