அதிரையில் இராமநாதபுர செஞ்சிலுவை சங்க தன்னார்வலர்கள் ..

தஞ்சைமாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அதிராம் பட்டினத்தில் கஜ புயல் பாதித்தோருக்கு நிவாரண பொருட்களுடன் இராமநாதபுரம் ரெட் கிராஸ் சொசைட்டி தன்னார்வலர்கள் சென்றுள்ளனர்.

இராமநாதபுரம் ரெட் கிராஸ் குழுவினர் கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் ஏற்கனவே சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்சமயம்  இராமநாதபுரம் மற்றும் நாமக்கல் ரெட் கிராஸ் குழுவினர் கரம்பாயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புனரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.