சபாஷ் ஆய்வாளர் – பேரிடர் மீட்பு பணியில் களமிறங்கிய ஆய்வாளர் …

பொன்னமராவதியில் பேரிடர் பாதுகாப்பு பணியில் கால்துறை ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் சாலையின் நடுவே ஒடிந்து கிடக்கும் மரம் மற்றும் மின்கம்பங்கள் அகற்றும் பணி நடைபெற்றுவருகிறது.

பொன்னமராவதி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கஜா புயல் தாக்கத்தால் கடந்த இரண்டு தினங்களா மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் சாலையோரங்களில் உள்ள மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முற்றிலுமாக உடைந்து சாலையில் வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் வேகமாக பணியாற்றி வந்தாலும் கூட பணி பளூவின் காரணமாக அனைத்து இடங்களிலும் பணி பார்க்க முடியாமை காரணமாக பொன்னமராவதி காவல்துறை ஆய்வாளர் கருனாகரன் தலைமையில் 10 க்கும் மேற்ப்பட்டோர் சாலை போக்குவரத்து பாதிப்படைந்த பகுதிகளுக்கு சென்று சாலையில் விழுந்து கிடக்கும் மின்கம்பம், மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் பொன்னமராவதி மற்றும் சுற்று வட்டாரப்பகுதியில் மின் வினியோகம் 4 நாட்கள் கூட ஆகலாம் என்ற நிலையில் உள்ளது.

கஜாபுயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த பொன்னமராவதி காவல்துறை ஆய்வாளர் கருணாகரன் கிராமப்புறங்களுக்கு சென்று பார்வையிட்டவர் அவ்வப்போது ஆடையில்லாமல் இருந்த குழந்தைகளுக்கு ஆடைகள் வழங்கினர்.

கீழை நியூஸுக்காக:- ஜெ .அஸ்கர்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..