6ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ரய்யான்…

ரய்யான் ஹஜ், உம்ரா சர்வீஸ் நிறுவனத்தின் 6-ஆம் ஆண்டு துவக்க விழா 16.11.2018 அன்று கோலாகலமாக மக்காவில் கொண்டாடப்பட்டது.

சினர்ஜி இண்டர்நேஷனல் குழுமத்தின் நிறுவன இயக்குநர் பொறியாளர் கீழை இர்பான் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சேலம் தொழில் அதிபர் ஹாஜி கவுஸ், ரியாத் தமிழ் சங்கம் நிர்வாகி சிக்கந்தர், அபுதாபி மொலினா சிங்கப்பூர் ஸ்டோர் கீழை.இபுறாகீம், கீழை.ஹபீபு (மக்கா), மக்கா அலாவுதீன் குழுமத்தின் தலைவர் அலாவுதீன், மக்கா தமிழ் சங்க நிர்வாகி காயல் இபுறாகீம், முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி ராஜா முஹம்மது, அல் சரீப் கேட்ரீங் நிறுவனத்தின் மேலாளர் பரீத், ஏர்வாடி ஜாஹீர் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

6-ஆம் ஆண்டு விழா சிறப்பு சலுகை பேக்கேஜ் விபரங்களை குழும நிறுவன இயக்குநர் முனைவர் எம்.ஹுஸைன் பாஷா கடந்த வாரம் சென்னையில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..