பாலஸ்தீன மக்களுக்கு குரல் கொடுக்க துருக்கியில் ஆர்ப்பரிக்கும் உலக எழுத்தாளர்கள், தமிழகத்திலிருந்து அ.முத்துக்கிருஷணன்..

காலம் காலமாக பாலஸ்தீன மக்கள் நசுக்கப்பட்டும், உரிமைகள் பறிக்கப்பட்டும், சொந்த நாட்டிலேயே அகதியாக வாழும் நிலை நீடித்துக் கொண்டே இருக்கிறது.  அதை மறைமுகமாக பல மேற்கத்திய நாடுகள் ஆதரித்த வண்ணம் அம்மக்களுக்கு துரோகம் இழைத்துக்கொண்டு தான் இருக்கின்றனர்.  அதே போல் அம்மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியும், தீர்வுகளையும், ஆதரவுகளும் பல மத்திய கிழக்கு நாடுகள் செய்த வண்ணத்தின் உள்ளனர் என்றால் மிகையாகாது.  ஆனால் ஒவ்வொரு கால கட்டத்திலும் பாலஸ்தீன மக்களின் துயர்களை உள்ளதை உள்ளபடி மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதில் பத்திரிக்கையாளர்களின் பங்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

இவ்வரிசையில் இன்றும், நாளையும் (17/11/2018 மற்றும் 18/11/2018) ஆகிய இரண்டு நாட்களில்  துருக்கி நகரின் தலைநகர் இஸ்தான்புல்லில் உலகின் பல்வேறு பகுதியில் இருந்து 700கும் மேற்பட்ட தலைசிறந்த பத்திரிக்கையாளர்கள் பாலஸ்தீன மக்களின் துயரங்களையும், அவர்கள் படும் வேதனைகளையும், அதற்கான தீர்வு என்ன என்பதை இவ்வுலகிற்கு விளக்க “PALESTINE ADDRESSING THE WORLD” என்ற மாநாட்டிற்காக  ஒன்று கூடியுள்ளார்கள்.

இம்மாநாட்டிற்கு இந்தியாவில் இருந்து 10 எழுத்தாளர்க்ள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சென்றுள்ளார்கள்.  இதில் தமிழகத்தில் இருந்து எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் அ.முத்துக்கிருஷணன் மட்டுமே சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் ஏற்கனவே பாலஸ்தீனத்திற்கே நேரடியாக சென்று அவர்கள் படும் துயர்களை தொடர் கட்டுரையாகவும், புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார் என்பது அறிந்த விசயம்.

பல நாடுகளில் இருந்து பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்ட இந்த இரண்டு நாள் மாநாட்டில்  பாலஸ்தீன மக்கள் பற்றிய குறும்படங்கள், சிறப்பு கருத்தரங்கம், முன்னனி பேச்சாளர்களின் சிறப்புரை, பாலஸ்தீன அவலங்களை விளக்கும் ஓவியங்கள் மற்றும் இன்னும் பல அம்சங்கள் நடைபெற உள்ளது.

இம்மாநாடு நிச்சயமாக பாலஸ்தீன மக்களின் வாழ்வில் ஓரு மாற்றதை உண்டாக்க ஒரு முக்கிய திருப்புமுனை நிகழ்வாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.  இம்மாநாடும், கருத்தரங்கமும் வெற்றி பெற நாமும் பிரார்த்தனையோடு வாழ்த்துவோம்.

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..