முகம்மது சதக் ஹமீது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சி விழா…

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (17.11.18) கல்லூரி வளாகத்தில் அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சி  நடைபெற்றது. இவ்விழாவில் அரபித்துறை தலைவர் M.ரெய்ஹானா அதவியா  இறைவணக்கத்துடன் தொடங்கியது.  அதை தொடர்ந்து கல்லூரி முதல்வர் டாக்டர் A.R. நாதிரா பானு கமால் அறிவியல் முன்னேற்ற வளர்ச்சியினை மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில்  S.M.H.சர்மிளா,  முகம்மது சதக் அறக்கட்டளையின் செயலாளர் தலைமையுரையினை வழங்கினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திருமதி. T. ஹெட்சி லீமா அமலினி திட்ட இயக்குநர், இராமநாதபுரம்,   ரிப்பன் வெட்டி அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சியினை தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்த கல்லூரி நிர்வாகம் சிறப்பு  விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தது. பின்னர் சிறப்பு விருந்தினர் மற்றும் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவிகள், ஆசிரியர்கள் கண்காட்சியில் கலந்து கொண்டு தொழில்ந நுட்ப விளக்கங்களை கேட்டு அறிந்தனர்.

பின்னர் நிகழ்வின் தொட்ச்சியாக மலபார் கோல்டு & டைமண்ட் நிர்வாகத்தின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது. முதலாம் பரிசு எம். ஜி.பப்ளிக் மெட்ரிக்குலேசன் மாணவிகள் பிரவினா மற்றும் ஸ்ரீவர்ஷா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பிற ஐந்து பரிசுகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

இவ்விழா ஒருங்கிணைப்பாளர் அன்வர் ரோஷாகீன், கணினி பயன்பாட்டியியல் துறைத்தலைவர் மற்றும் உதவி பேராசிரியர்  நன்றியுரை மற்றும் அரபித்துறை தலைவர் அவர்கள் இறை வணக்கத்துடன்   நிகழ்ச்சி நிறைவடைந்தது.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..