இராமநாதத்தில் 1383 பயனாளிகளுக்கு ரூ.9.86 கோடி அரசு நலத்திட்ட உதவி…

இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவுத் துறை சார்பில் 65-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமை வகித்தார். மாவட்டதில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள், ஊராட்சி அளவிலான 93 கூட்டமைப்பு குழுக்களுக்கு ரூ.9 கோடியே 86 லட்சத்து 35 ஆயிரத்து 375மதிப்பில் அரசு நலத்திட்டம், கடனுதவி, போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, மணிகண்டன் ஆகியோர். வழங்கினர்.

மேலும் இவ்விழாவில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது: தமிழக கூட்டுறவுத்துறை செயல்பாடுகளை பொறுத்த வரை பயிர் கடனாக தமிழகம் முழுவதும் 2011 முதல் 07.11.2018 வரை 75,42,112 பேருக்கு ரூ.37,764.04 கோடி வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 90,008 பேருக்கு ரூ.349.16 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் பயிர் கடனாக மாநிலம் முழுவதும் ரூ.8 ஆயிரம் கோடி, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரூ.85 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 12,02,075 பேரிக்கு ரூ.5,318.73 கோடி பயிர் கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.


2016-17 ஆம் ஆண்டில் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்த 12,01,889 விவசாயிகளுக்கு 2018 அக்.31 வரை 11, 61,251 விவசாயிகளுக்கு ரூ.3,350.27 கோடி இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.545 கோடி இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. வறட்சி, தானே புயல், வெள்ளம், பயிர் கடன் தள்ளுபடி, பயிர் காப்பீடு இழப்பீடு என்ற வகையில் மாநிலம் முழுவதும் 2011 முதல் 2018 அக்.31வரை 98, 08, 537 பேருக்கு ரூ.13,922.53 கோடி சலுகை வழங்கப்பட்டுள்ளது என பேசினார்.

அதைத் தொடர்ந்து பேசிய தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் பேசுகையில், பொது விநியோகத் திட்டம் செயல்பாட்டில் இந்தியாவிலேயே தமிழகம் தான் பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் நலன் காத்திட கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு பயிர் கடனுதவிகளும் வழங்கப்படுகிறது.  ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயை தூர்வார வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று வகையில் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நடைபெற்று வருகிறது, என கூறினார்.

இவ்விழாவில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5.75 லட்சம், 83 சுய உதவி குழுக்களை சேர்ந்த 1179 பெண்களுக்கு ரூ.4,35,35,000 நேரடி கடன், 10 குழுக்களைச் சேர்ந்த 50 பேருக்கு ரூ.24 லட்சம் நபார்டு கூட்டு பொறுப்பு குழு கடன், இரண்டு பேருக்கு ரூ.3 லட்சம் தாட்கோ திட்ட மானிய கடன், 5 பேருக்கு ரூ.2,18,375 தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி மூலம் பயிர் கடன், 51 பேருக்கு ரூ.24.40 லட்சம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி மூலம் மத்திய கால கடன், 84 பேருக்கு ரூ.4,91,67,000 பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க மத்திய காலக் கடன் வீதம் 93 குழுக்களைச் சேர்ந்த 1,383 பேருக்கு ரூ.9,86,35,375 கடன் உதவி வழங்கப்பட்டது.


முதுகுளத்தூர் சட்ட மன்ற உறுப்பினர். மலேசியா எஸ். பாண்டி, கூட்டுறவு சங்க இணை பதிவாளர் முருகேசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் திருகுணஐயப்ப துரை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பனைவெல்ல கூட்டுறவு சம்மேளன தலைவர் சேது. பாலசிங்கம் , இராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவர் அசோகன், இராமநாதபுரம் , சிவகங்கை, விருதுநகர் மண்டல மீனவர் கூட்டுறவு சம்மேளன தலைவர் வேலுச்சாமி , ராம்கோ முன்னாள் சேர்மன் செ. முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர். சரக துணை பதிவாளர் கணேசன் நன்றி கூறினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..