இஸ்தான்புல் துருக்கியில் நடைபெறும் பத்திரிக்கையாளர் மாநாட்டின் முதல் அமர்வு ஒரு பார்வை..

இன்று (நவம்பர் 17,2018) காலை 10 மணிக்கு இஸ்தான்புலில் “தவாசூல் 3” என்கிற நிகழ்வில் “பாலஸ்தீன பிரச்சனை உலகிற்கு அறிவிப்போம்” என்ற தலைப்பில் சர்வதேச பத்திரிக்கையாளர்களின் சந்திப்பு தொடங்கியது.

அதன் முதல் அமர்வில் வென் வைட், ஷஃபீக் மோர்டன், ஜோனாதன் ஸ்டீல், ஷஃபி அல்-கப்ரா ஆகிய நால்வரும் பேசினார்கள். உலகம் முழுவதும் இயங்கும் வரும் பெரு ஊடங்கள் பாலஸ்தீன பிரச்சனையை எப்படி அனுகிவருகிறார்கள் என்பதி குறித்து பல அம்சங்கள் இதில் விவாதிக்கப்பட்டது. இதன் பின்னர் கேள்வி-பதில் அரங்கு நடைபெற்றது.

இன்று நடைபெற்ற முதல் அமர்வில் கருத்தரங்கில் பங்கு பெற்ற பேச்சாளர் மற்றும் பத்திரிக்கையாளர்களின் பங்கு பற்றிய ஒரு குறிப்பு:-

பென் வைட் (BEN WHITE)

இவர்க்க ஒரு ஒரு சுயாதீன பத்திரிக்கையாளர், எழுத்தாளர், மனித உரிமை போராளி. அவர் தொடர்ச்சியாக பாலஸ்தீன் – இஸ்ரேல் பிரச்சனை குறித்து எழுதி வருபவர். அவரது நூல்கள் சில : ‘Palestinians in Israel: Segregation, Discrimination and Democracy’, ‘Israeli Apartheid: A Beginner’s Guide’

ஷஃபீக் மோர்டன் (SHAFIQ  MORTAN)

இவர் ஒரு பத்திரிக்கையாளர், புகைப்பட ஊடவியலாளர், வாணொளி தொகுப்பாளர் என் பலதுறை சார்ந்தவர். முப்பது ஆண்டுகளாக அவர் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பல்வேறு விசயங்களை எழுதி வருகிறார். அவரது நூல்கள் சில: ‘Surfing behind the Wall, My Palestinian Journey’, ‘Notebooks from Makkah and Madinah’.

ஜோனாதன் ஸ்டீல் (JONATHAN STEELE)

லண்டனில் இருந்து இயங்கு வரும் ஜோனாதன் ஸ்டீல் கார்டியன் பத்திரிக்கையில் தொடர்ந்து வெளியுறவு துறை சார்ந்து எழுதி வருபவர், 9/11 தாக்குதல்களுக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராகிற்கு சென்று களத்தில் இருந்து எழுதியவர். பாலஸ்தீனம் – இஸ்ரேல் குறித்து தொடர்ந்த சர்வதேச பரப்பில் கவனத்தை ஏற்பத்தி வருபவர். அவரது நூல்கள் சில: Ghosts from Afhgahnistan, Temptations of a Super Power, Defeat why they lost Iraq, Soviet Power.

ஷஃபிக் அல்கப்ரா (SHAFEEQ AL GHABRA)

குவைத் பல்கலைகத்தில் அரசியல் அறிவியல் துறையின் பேராசிரியராக இருந்தவர், அல் ஹயாத், Middle East Transparent இதழ்களில் தொடர்ந்து எழுதி வருபவர்.

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal