கஜா புயலில் நிலை குலைந்த அதிராம்பட்டிணம்… விரைந்து உதவி கரம் நீட்டுவீர்.. வீடியோ மற்றும் புகைப்பட தொகுப்பு …

கடந்த இரண்டு நாட்களாக கஜா புயல் நாகப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுபற பகுதியில் ருத்ரதாண்டவம் ஆடி விட்டு சென்றுள்ளது. இதில் ஓரவஞ்சனையாக பெரிய ஊடகங்கள் வேதாரண்யம் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவது வேறு எந்த பகுதியும் அந்த அளவுக்கு பாதிக்கப்படவில்லை என்ற மாயை உருவாக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த புயலால் அதிராம்பட்டிணம் நிலை குலைந்து போயிருப்பதை ஊடங்கங்கள் முழுமையாக வெளிப்படுத்தவில்லை என்பது மிகவும் வேதனையான விசயம்.  பல வீடுகளும், தென்னை தோப்புகளும், சாலைகளும், விலை மதிப்புமிக்க வாகனங்கள் மற்றும் இன்னும் பல மதிப்பிடமுடியாத அளவுக்கு சேதம் அடைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து அரசாங்க உதவியை மட்டும் நாடியிருக்காமல், இந்தியா மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் அவ்வூர் மக்கள் நிதி மற்றும் பொருட்களை திரட்ட தொடங்கியுள்ளார்கள். தற்சமயம் அதிரைக்கு புயல் நிவாரணப்பொருட்கள் அனுப்ப விருப்பம் உள்ளவர்கள்  இன்று 17.11.2018 சனிக்கிழமை இரவு சென்னை SEAPOL DHEEN ESTATE,  42 MOORE STREET, CHENNAI,  அலுவலகத்திலிருந்து நிவாரணப்பொருட்கள் ஏற்றி லாரி புறப்பட இருக்கிறது. நிவரணப்பொருட்கள் அனுப்ப விருப்பம் உள்ளவர்கள்  கீழ்கண்ட நபர்களிடம் தகவல். மற்றும் பொருட்களை ஒப்படைக்கலாம்.
Mr.GANI –  9600035454
MR.NOORULLA  – 9003205379.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image