Home செய்திகள் நெல்லை கடையநல்லூர் தொகுதியில் கலந்தாய்வு பணி..

நெல்லை கடையநல்லூர் தொகுதியில் கலந்தாய்வு பணி..

by ஆசிரியர்

கடையநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து நகராட்சிகள் பேரூராட்சிகள் உள்ளாட்சிகளின் அதிகாரிகள் அடங்கிய ஆலோசனை கூட்டம் 14.11.2018 புதன்கிழமை 3.30 மணியளவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் செங்கோட்டை நகராட்சி பொறியாளர் ரமேஷ், கடையநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ சக்தி அனுபமா, கிராமப்புற வளர்ச்சி அலுவலர் வெங்கடேஸ்வரி, துணை பொறியாளர் ஹவ்வா சாஹிரா, செங்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் அருணா தேவி தென்காசி வட்டார வளர்ச்சி அலுவலர் பரிகா சாரதி, கிராமப்புற வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகநாதன் , கடையநல்லூர் நகராட்சி இணை பொறியாளர் R.முரளி, அச்சன் புதூர் செயல் அலுவலர் A.சிவகுமார், புதூர் செயல் அலுவலர் ஆதம், ஆய்க்குடி செயல்அலுவலர் கந்தசாமி, சாம்பவர் வடகரை செயல் அலுவலர் அபுல் கலாம் ஆசாத், பண்பொழி செயல் அலுவலர் A.முரளி,வடகரை மேற்பார்வையாளர் P.சிவகுமார், கடையநல்லூர் யூனியன் துணை பொறியாளர் ஜெகதீஷ் , ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கடையநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் பணிகள் குறித்தும், அரசு திட்டங்களின் செயலாக்கம், மழை காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சுகாதாரக்கேடு சாலை வசதிகள் குறித்து பகுதிவாரியாக அதிகாரிகளுடன் முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, தொய்வடைந்து உள்ள பணிகளுக்கான காரணங்களை அறிந்து அதோடு குறிப்பிட்ட கால அளவுக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

மேலும் புதிய திட்டங்களுக்கான தகவல்களை உடனுக்குடன் தன்னோடு அதிகாரிகள் பகிர்ந்து கொள்ள வேண்டும், பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்க்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

கடையநல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிகமான மக்கள் தொகையை திருநெல்வேலி மாவட்டத்திலேயே இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட கடையநல்லூர் நகராட்சியில் சிறிய சிறிய பணிகள் கூட கடையநல்லூர் நகராட்சி நிர்வாகம் செயல்படுத்தாமல் அலட்சியப்போக்கோடு செயல்படுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் மிகுந்த வருத்தத்தை தெரிவித்ததோடு மேலும் காலம் தாமதித்தால் தனது தலைமையில் கடையநல்லூர் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாகவும் அறிவிப்புச் செய்தார்.

இக்கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில அமைப்பு செயலாளர் நெல்லை மஜீத் , நகர செயலாளர் அப்துல் லத்தீப், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகப் பொறுப்பாளர் கமால், செயலாளர் பாட்டபத்து கடாபி ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!