20 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக., திமுக டெபாசிட் இழக்கும்… தங்க தமிழ் செல்வன் பேட்டி – வீடியோ ..

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமமுக செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் வ.து.ந. ஆனந்த் தலைமை வகித்தார்.

இதில் கலந்து கொண்ட  அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது: ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக உள்பட அனைத்து கட்சிகளும் டெபாசிட் இழந்தன. ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பிறகு புதிய தலைமையை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த புதிய தலைமை டிடிவி தினகரன் என்பதை நாங்கள் நிருபிப்போம். ஐ.பெரியசாமியின் பகல் கனவு பலிக்காது. 20 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, திமுக டெபாசிட் இழக்கும் என்றார். முன்னாள் எம் ஏல் ஏ., க்கள் முத்தையா (பரமக்குடி), முருகன் (முதுகுளத்தூர்), அமைப்பு செயலர் முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image