கஜா புயல் எதிரொலி இராமேஸ்வரம் ரயில் சேவைகள் நிறுத்தம்..

கடலோர பகுதிகளில் கஜா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து ராமேஸ்வரம் வந்து செல்லும் ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன: வண்டி எண் 56829/56830 திருச்சி ராமேஸ்வரம் -திருச்சி பயணிகள் ரயில் 15.11. 2018 அன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 56723/56724, 56721/56722, 56725/56726 மதுரை -ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் ரயில் 15. 11. 2018 அன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

14. 11. 2018 அன்று சென்னையிலிருந்து புறப்படும் வண்டி எண் 22661 சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் (சேது எக்ஸ்பிரஸ்) மானாமதுரை -ராமேஸ்வரம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மானாமதுரை வரை இயக்கப்படும்.

15. 11. 2018 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 22662 ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் (சேது எக்ஸ்பிரஸ்) ராமேஸ்வரம் -மானாமதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மானாமதுரையிலிருந்து இருந்து இயக்கப்படும் .

14. 11. 2018 அன்று சென்னையிலிருந்து புறப்படும் வண்டி எண் 16851 சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் மானாமதுரை -ராமேஸ்வரம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மானாமதுரை வரை இயக்கப்படும்.

15. 11. 2018 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 16852 ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் ராமேஸ்வரம் -மானாமதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மானாமதுரையிலிருந்து இருந்து இயக்கப்படும் .

15. 11. 2018 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 16780 ராமேஸ்வரம் – திருப்பதி எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் – மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மதுரையிலிருந்து இருந்து இயக்கப்படும் .

15. 11. 2018 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 22621 ராமேஸ்வரம் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் -மானாமதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மானாமதுரையிலிருந்து இருந்து இயக்கப்படும் .

15. 11. 2018 அன்று வண்டி எண் 16734 ஓகா – ராமேஸ்வரம் – எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் -மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மதுரை வரை இயக்கப்படும்.

16. 11. 2018 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 16733 ராமேஸ்வரம் – ஓகா எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் -மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு மதுரையிலிருந்து இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..