இராமநாதபுரத்தில் சூரசம்ஹாரம்…

இராமநாதபுரம் முருகன் கோயில்களில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு வழிவிடு முருகன் கோயில், குண்டுக்கரை சுவாமி நாதசுவாமி கோயில் சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று (13.11. 18) மாலை நடைபெற்றது.

இராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவ.8 ஆம் தேதி காலை காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் இரவு ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி இன்னிசை கச்சேரி, பாராயணம் நடந்தன. முக்கிய நிகழ்வாக இன்று (13.11.18) மாலை வழி விடு முருகன் கோயில் முன்பாக அர்ச்சகர் வையாபுரி, உற்சவர் முருக பெருமானிடமிருந்து வேலை வாங்கி வந்து அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதன் பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது..இதனையடுத்து பட்டிமன்ற நடுவர் ஆர்.வாசு தலைமையில் பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. நாளை (14.11.18) காலை தெய்வானை திருக்கலாயணம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர் சு.கணேசன் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.

இராமநாதபுரம் நகர் குண்டுக்கரை சுவாமி நாதசுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா நவ. 8 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு தினமும் காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தன. மூலவர் சுவாமி நாதசுவாமி சந்தன அலங்காரத்தில் தினமும் இரவு பல்வேறு அலஙகாரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தினமும் இரவு பரதநாட்டியம், இன்னிசை கச்சேரி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இன்று மாலை கோயிலில் இருந்து உற்சவர் சுவாமி நாதசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் முக்கிய வீதிகளில் உலா வந்து ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானம் வந்தடைந்தார். பின்னர் அங்கு அசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி், அசூரன் சேவலாகவும், மயிலாகவும் மாறும் நிகழ்ச்சி நடந்தன. வாண வேடிக்கைகள் வானில் வர்ண ஜாலம் காட்டின.

இராமநாதபுரம் சமஸ்தான திவான் வி.கே.பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் எம்.ராமு, தமிழ்ச்சங்க மகளிர ணிதலைவி டாக்டர்.மதுரம் அரவிந்தராஜ், துணைத் தலைவர் குழ.விவேகானந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் விழாக்குழு தலைவர் எம்.காந்தி, செயலாளர் எஸ்.நாகராஜன், பொருளாளர் ஆடிட்டர்.லோகநாதன் தலைமையில் விழா குழுவினர் செய்தனர். சூரசம்ஹார நிறைவுக்கு பின்னர் கோயிலுக்கு வந்த சுவாமிக்கு சாந்த அபிஷேகம், தீபாராதனைக நடந்தன.நாளை (14.11.18) காலை மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் மற்றும் கோயில் வளாகத்தில் தெய்வானை திருக்கல்யாணம், அன்னதானம் நடைபெறுகிறது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..