இராமநாதபுரத்தில் கடந்த ஓராண்டில் 99 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்..

தேசிய அளவில் குழந்தைகளுக்காக 24 மணி நேரமும் செயல்படும் இலவச அவசர தொலைபேசி சேவை 1098 ஆன்லைன் மூலம் நாடு முழுவதும் உள்ள தெருவோர குழந்தைகள், விளிம்பு நிலை குழந்தைகள், காவல்துறை மற்றும் சுகாதார உதவியை எளிதாக பெற முடியும். சைல்டு லைன் 1098 சேவையை இந்திய பவுண்டேஷன் நிறுவனம் இந்தியா முழுவதும் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மூலம் செய்து வருகிறது.

இராமநாதபுரம் மாவட்ட சைல்டு லைன் சார்பாக வரும் 19-ம் தேதி வரை உங்கள் நண்பன் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2017 நவம்பர் முதல் நடப்பாண்டு அக்டோபர் வரை 1098 என்ற எண்ணுக்கு 1179 தொலைபேசி அழைப்புகள் வந்தன. இந்த அழைப்புகள் மூலம் வந்த 1070 பிரச்னைகளுக்கு சைல்டு லைன் குழு உறுப்பினர்கள் கள விசாரணை தீர்வு கண்டுள்ளனர்.

இதில் கடந்த ஓராண்டில் மாவட்டம் முழுவதும் 99 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 18 வயதிற்குட்ட குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய 38 புகார்கள் கிடைக்கப் பெற்று விசாரணையில் 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. பள்ளி இடை நின்ற குழந்தைகள் , வீட்டை விட்டு ஓடிய குழந்தைகள், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர் மற்றும் இதர பிரச்னைகள் தொடர்பாத 833 பேருக்கு உதவி செய்யப்பட்டுள்ளது என்றார். மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சகுந்தலா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் , சைல்டு லைன் துணை இயக்குநர்கள் மன்னர்மன்னன், தேவராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..