Home கட்டுரைகள் பயணம் – 7, பயணங்களும்… பாடங்களும் தொடர்கிறது..

பயணம் – 7, பயணங்களும்… பாடங்களும் தொடர்கிறது..

by ஆசிரியர்

பயணங்களை எல்லா மதங்களும் வரவேற்கிறது. புனிதப்பயணங்களை எல்லா மதங்களும் ஊக்குவிக்கிறது. பயணிக்க அதற்கான காரணங்களை அறிவித்து புனித இடங்களுக்கு ஈர்க்கும் பணியை செய்கிறது.

உலகத்தின் சில பகுதிகளில் பரவி வாழ்ந்தாலும் இன்றைக்கு இஸ்ரேல் என்னும் ஒரு நாட்டை கட்டமைத்து அந்த நாட்டை யூதர்களுக்கான நாடாக ஆக்கப்பட்டு இருக்கிறது. சிரியாவின் ஆளுகைக்கு கீழே இருந்த பாலஸ்தீனப் பகுதிகளில் பாலஸ்தீன மக்கள் பூர்வகுடிகளாக வாழ்ந்து வந்தனர்.

ஜெர்மனியின் சர்வாதிகார ஆட்சியாளர் யூதர்களை கூண்டோடு கொன்றொழிக்க பலவகை அடக்குமுறைகளை செய்தார். சிறைகளில் அடைக்கப்பட்டு விஷவாயுக்கள் செலுத்தப்பட்டு கொத்துகொத்தாக யூதர்கள் கொல்லப்பட்டனர்.

இதுபோன்ற கொடிய நிகழ்வுகளுக்கு யூதர்களின் அராஜகங்களும், தாங்கள்தான் இந்த உலகத்தை ஆளப் பிறந்தவர்கள், யூதர்கள்தான் கடவுளின் குழந்தைகள் என்ற மனோபாவமும், அதை ஒட்டிய செயல்பாடுகளும் யூதர்களை கொன்றொழிக்க வேண்டும் என்ற சூழலை உருவாக்கியது.

யூதர்கள் நாடட்டற்ற நாடோடிகளாக சுற்றி வந்தனர். இறுதியில் ஏகாதிபத்திய நாடுகளின் அழுத்தத்தால் குறிப்பாக பிரிட்டன் மற்றும் அமெரிக்க வல்லரசுகளின் ஆதரவுகளால் பாலஸ்தீனப் பகுதிகளை கூறுபோட்டு இஸ்ரேல் என்ற ஒரு நாடு உருவாக்கப்பட்டது.

வட்டி தொழிலில் யூதர்கள் கொடிகட்டி பறந்தார்கள். பாலஸ்தீனப் பகுதிக்கு வந்த யூதர்கள் பாலஸ்தீனப் பகுதிகளில் வாழ்நத அரபுமக்களுக்கு நிலங்களை அடமானமாக பெற்றுக்கொண்டு கடன் கொடுத்தனர்.

இவ்வாறு சிறுக சிறுக நிலங்களை அடமானமாக பெற்று கடன்அளித்த யூதர்கள்அந்த நிலங்களை தங்களுடையதாக மாற்றிக் கொண்டார்கள். யூத குடியிருப்புகளை உருவாக்கினார்கள். உலகத்தின் பல திசைகளில் அநாதைகளாக வாழ்ந்து வந்த யூதர்களை இந்த ஆக்கரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிக்கு வரவழைத்து குடி அமர்த்தினார்கள்.

யூதர்களின் குடி அமர்வினால் அவர்களின் எண்ணிக்கை பெருகியது. யூதர்களிடம் பொருளாதாரமும் வலுவாக இருந்தது. பொதுவாக மனிதசமூகத்தில் யூதர்களே மிகச்சிறந்த அறிவாளிகள். யூதர்களே ஏராளமான அறிவியல் மேதைகள், புதியகண்டு பிடிப்பாளர்கள், வல்லுநர்கள் என மிகப்பெரிய அறிவுஜீவிகளாக இருந்தனர்.

ஆகவே அவர்களைப் பயன்படுத்த ஆர்வம் கொண்ட பிரிட்டனும், அமெரிக்காவும் பாலஸ்தீன் பகுதியைபிரித்து இஸ்ரேல் என்று தேசத்தைகட்டமைத்தன. ஏராளமான நாடுகளை இஸ்ரேலை அங்கீகரித்து அந்த நாட்டுடன் தங்களது தூதரக உறவுகளை வைத்துக் கொண்டன. இந்தியா இஸ்ரேலை அங்கீகரிக்க தயக்கம் காட்டியது. இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் பாலஸ்தீன அதிபர் யாஸர் அரபாத்தோடு நெருக்கமாக நட்புறவு பாராட்டினார்கள்.

பாலஸ்தீனையே இந்தியா ஆதரித்து ஏராளமான உதவிகளை செய்தது. பின் காலங்களில் பாசிச சிந்தனையுள்ள தலைவர்களின் அழுத்தத்தால் இந்தியாவும் இஸ்ரேலை அங்கீகரித்தது. குறிப்பாக இன்றைய காவிகளின் அரசு இஸ்ரேலுடன் மிகநெருக்கமாக இருப்பதுடன் பல ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளது.

யூதர்கள் பாலஸ்தீனப் பகுதிகளில் பாலஸ்தீன மக்களை ஒழித்துக்கட்டும் அராஜக நடவடிக்கைகளையும் அதே சூத்திரத்தை காவிகள் முஸ்லீம்களை ஒழிக்க இந்தியாவிலும் பயன்படுத்துகிறார்கள்.

யூதர்களின் பலங்களையும் புனிதத்தலங்களையும் தொடர்ந்து பேசுவோம்…!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!