இராமநாதபுரம் அருகே நோய் தடுப்பு பணி…

இராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் மூலம் டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய பணிகளில் கிராம ஊராட்சி செயலர்கள் பங்கு மிகவும் இன்றியமையாதது.  ஊரக பகுதிகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் குடிநீரில் அனுமதிக்கப்பட்ட அளவு குளோரினேசன் செய்து வழங்க வேண்டும். குடிநீர் தொட்டிகளை போதிய கால இடைவெளியில் முறையாக சுத்தம் செய்ய வேண்டும். குடிநீர் விநியோக குழாய்களில் ஏற்படும் அடைப்பு, நீர் கசிவை கண்டறிந்து குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் ஒருங்கிணைந்து உடனடியாக அதனை சீர் செய்ய வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.   முறைகேடான இணைப்புகள் மூலம் தண்ணீரை பயன்படுத்துவதை  ஆய்வு செய்து  பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஊராட்சி செயலர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள கொசுப்புழு உற்பத்தி தடுப்பு பணியாளர்களுடன் ஒருங்கிணைந்து வீடு, வீடாக சென்று கொசு முட்டைகள் அழிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.

திடக்கழிவு மேலாண் திட்டத்தின் கீழ் தூய்மை காவலர்களை  பயன்படுத்தி வீடுகள் தோறும் குப்பையை பெற்று  தரம் பிரிக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.குப்பை கொட்டுவதற்கென அனுமதித்த இடங்கள் தவிர கண்ட இடங்களில் குப்பை கொட்டுவோர் மீது பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் சட்ட விதிகள் படி அபராதம் விதிக்கும் நடவடிக்கையை  தீவிரப்படுத்த வேண்டும்.   ஊராட்சி செயலர்கள் தங்களது பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்களை ஒருங்கிணைத்து ஒரு வாரதிற்குள் முழு சுற்றுப்புற தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என கிராம ஊராட்சி செயலர்களுக்கு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவுறுத்தி உள்ளார்.

இதனடிப்படையில் இராமநாதபுரத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இராமநாதபுரம் அருகே தொருவளூர், குமரியேந்தல் கிராமங்களில் உள்ள வீடுகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் கொசு புழுக்கள் உற்பத்தி உள்ளதா என்பது கமுதி பேரூராட்சி பணியாளர்கள் கள ஆய்வு செய்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..