இளம்பெண் மீது போதை வாலிபர்கள் ஆசிட் வீச்சு..

இராமேஸ்வரம் அருகே ராஜிவ் காந்தி நகர், டி.எம்.எஸ் நகரைச் சேர்ந்த வாலிபர்கள் இடையே குடி போதையில் தகறாறு ஏற்பட்டது. இதனையடுத்து இரு தரப்பினர் கல்வீச்சில் ஈடுபட்டனர்.

அப்போது வீட்டு வாசல் முன் நின்ற இளம் பெண் மீது ஆசிட் வீசி விட்டு ஒரு பிரிவினர் தப்பி ஓடினர். இதில் கழுத்து பகுதியில் காயமடைந்த கவுசல்யா 20, ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ராமேஸ்வரம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Be the first to comment

Leave a Reply