ஆத்தூர் தாலுகா செம்பட்டி அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து 4 பேர் பலி…

திண்டுக்கல் – தேனி நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வரும் நிலையில், இன்று (04/11/2018) மாலை சுமார் 6 மணியளவில் சித்தையன்கோட்டை வித்யசிக்ஷா பள்ளி அருகில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.  இதில் இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்.

மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்பட்டி காவல்துறையினர் காய மடைந்தவர்களை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து போக்குவரத்தை சீர்செய்தனர்.

Be the first to comment

Leave a Reply