திண்டுக்கல் நகர்வடக்கு காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி..

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர், லஞ்சம் தவிர்ப்போம் புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்ற நோக்கத்திற்காக பள்ளி மாணவர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் இன்று (03/11/2018) காலை 09:20 மணிக்கு பேரணியை துவக்கி வைத்தார்.

இதில் 100 மாணவர்கள், 50 ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர். பேரணி திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஊரக வளர்ச்சித் துறை அலுவலகம் ,மீனாட்சி பவன் ஹோட்டல், பெரியார் சிலை, பக்கிரான்ஸ் ஜவுளி கடை, வழியாக சென்று நேருஜி நினைவு நகரவை மேல் நிலைப்பள்ளியில் நிரைவேற்றும் நடைபெற்றது.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

Be the first to comment

Leave a Reply