Home செய்திகள் இராமநாதபுரத்தில் “காவலன்” செயலி அறிமுகம்…

இராமநாதபுரத்தில் “காவலன்” செயலி அறிமுகம்…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் முதியோர் பாதுகாப்பிற்காக காவல் துறையில்  காவலன் செயலி (KAVALAN App)  உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உடனடியாக காவல் துறையினர் உதவி கிடைக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயலியில் உறவினர் மற்றும் நண்பர்களின் அலைபேசி எண்களை பதிவு செய்து கொள்ளலாம்.  பெண்கள் மற்றும் முதியோர்கள் தனியாக செல்லும் போது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அவர்களது செல்போன்களில் உள்ள இந்த செயலியை தொட்டால் போதும் சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு சென்று அடுத்த 5 விநாடிகளில் மீண்டும் அவரது அலைபேசி அழைப்பு வரும் நேரத்தில் இருந்து ஜிபிஎஸ் இயங்க ஆரம்பித்து அலைபேசி கேமரா தானாகவே 15 வினாடிகளில் ஒளி, ஒலியுடன் செயல்பட தொடங்கிவிடும். பாதிக்கப்பட்ட நபர் பேச முடியாத சூழ்நிலையில் இருக்கும் பட்சத்தில் ஜிபிஎஸ் உதவியுடன் அவர் இருக்குமிடம் அறிந்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடி உதவிகள் அளிக்கப்படும்.

மேலும் இந்த செயலியில் பதிவு செய்யப்பட்ட உறவினர் மற்றும் நண்பர்களின் அலைபேசி தங்களது இருப்பிடம் மற்றும் பகிரப்படும் இணைய இணைப்பு வசதி இல்லாத இடங்களில் மேற்படி செயலியை உபயோகித்தாலும் தானியங்கி எச்சரிக்கை மூலம் தகவல் சென்றடையும்.  மேலும் அவசர உதவிக்கு தமிழ்நாடு காவல்துறை சென்னை கட்டுப்பாட்டு அறை டயல் 100 /112 எஸ்எம்எஸ் / வாட்ஸ் ஆப் 79977 700100 facebook@ tnpdial 100,  என்ற twitter@tnpdial100 தகவல் தெரிவிக்கலாம். இராமநாதபுரம் மாவட்டம்  அழைப்பு / எஸ்எம்எஸ் / வாட்ஸ் அப் 83000 31100 இணையதளங்களிலும் கவிதைகளையும் பதிவு செய்யலாம் மேலும் இராமநாதபுரம் மாவட்டம் காவல் துறை சார்பாக காவல்துறை துணைத்தலைவர்,  காவல் கண்காணிப்பாளர்  உத்தரவின் பேரில் காவலன் செயலியின் முக்கியத்துவம்,  நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  ராமநாதபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் நடராஜன் , துணை  கண்காணிப்பாளர் (பயிற்சி) கோகுலகிருஷ்ணன்,  காவல் தொழில் நுட்ப பிரிவு சார்பு ஆய்வாளர் காளீஸ்வரன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.  இராமநாதபுரம் செய்யது  மேல்நிலைப்பள்ளி தாளாளர் பாபு அப்துல்லா, தலைமை ஆசிரியர் ஹாஜா முனகதீன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகள் காவலன் செயலியின் பயன்பாடுகள் குறித்து  எடுத்துரைத்தனர்

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!