காட்பாடியில் இலவச பொது மருத்துவ முகாம் ..

காட்பாடி தென்னக ரயில்வே பாரத சாரணர், சாரணியர் பாரதிதாசன் கஸ்தூரிபாய் குழு மற்றும் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் காட்பாடி ரயில் நிலையம் எதிரில் நடைபெற்றது. இம்முகாமை Sr.DME பரிமளா குமார்  துவக்கி வைத்தார்.

இம்முகாமில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு பொது மருத்துவம் பார்க்கப்பட்டது. காட்பாடி SMR ரவீந்திரநாத்,  SSE சவுந்தரராஜன் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டார்.

இம்முகாமிற்கான ஏற்பாட்டை தலைவர் கிருஷ்ணன் துணைத் தலைவர் சவுந்தர்ராஜன் குழு தலைவர் மதிமாறன் தலைவி உமாமகேஸ்வரி திரி சாரண தலைவர் மணிகண்டன் சாரண ஆசிரியர் மகேஷ்குமார் ஆசிரியர் சுந்தரேசன் ஆகியோர் செய்து இருந்தனர்.

கே.எம்.வாரியார்:- வேலூர் மாவட்ட செய்தியாளர்

Be the first to comment

Leave a Reply