வத்தலக்குண்டு அருகே அரசு பேருந்து மோதி 100  நாள் வேலைக்காக சாலையோரம் சென்று கொண்டிருந்த  மூன்று பெண்கள் படுகாயம்..

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு- சுந்தராஜபுரம் பிரிவில் காலை 8 மணியளவில் 100 நாள் வேலை பணிக்காக சாலையோரம் நடந்து  சென்று கொண்டிருந்த பெண்கள் மீது மோதி விபத்துக் குள்ளானதில் 5 பெண்கள் படுகாயம் அடைந்தனர். இவர்களை சிகிச்சைக்காக அனுப்புவதற்க்கு 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தும்  நீண்டநேரமாக 108 வாகனம் வராதததால் அப்பகுதி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக காயமடைதவர்களை வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து போக்குவரத்தை சீர்செய்தனர். செம்பட்டியில் இருந்து வாத்தலக்குண்டு வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் அடிக்கடி நடந்துவரும் நிலையில் விபத்தினால் பாதிக்க படுபவர்களை மருத்துவமனையில் சேர்ப்பதற்க்கு 108 ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் உயிர்பலி ஏற்படும் நிலைஉள்ளது. இதை கவனத்தில் கொண்டு 108 ஆம்புலன்ஸ் சேவையை செம்பட்டி மற்றும் வத்தலக்குண்டில் ஏற்படுத்தி தந்து உதவுமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

சத்திய பாதை மாத இதழ் ..

சத்திய பாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது… அசத்தியம் அழிந்தது..