Home செய்திகள் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் (TARATDAC) மாவட்டக்குழு கூட்டம்….

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் (TARATDAC) மாவட்டக்குழு கூட்டம்….

by ஆசிரியர்

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக்குழு கூட்டம் 01.11.18 அன்று காலை திண்டுக்கல்லில் மாவட்ட தலைவர் செல்வநாயகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தலைவர் ஜான்சிராணி மற்றும் மாவட்ட செயலாளர் பகத்சிங் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட மிகமிக முக்கிய முடிவு பின்வருமாறு..

ரயிலில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். அவர்களது குறைகள் அனைத்தையும் போக்க வலியுறுத்தி பலமுறை மனு அளித்தும், மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியும், டெல்லிவரை சென்று போராடியும் இன்றுவரை பலனில்லாத சூழ்நிலையே உள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் மட்டும் பயணம் செய்யும் ரயில் பெட்டிகள் சமீப காலமாக அகற்றப்பட்டு வருகின்றன, ரயில் டிக்கெட் எடுக்கும் இடங்களில் எல்லாம் பல்வேறு காரணங்களை கூறி சலுகை கட்டண அனுமதி சீட்டை நிராகரிக்கும் போக்கும் தொடர்கதையாக உள்ளது. அதுமட்டுமின்றி மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயணம் செய்ய முடிகிற வகையில் தங்குதடையற்ற சூழல் என்பது இல்லாத நிலையே உள்ளது. இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அனைத்து மண்டல/கோட்ட தலைமை அலுவலகத்தின் முன்பாகவும் காலவரையற்ற நீடித்த போராட்டம் நடத்த வேண்டும் என மாநில தலைமை முடிவெடுத்ததன் அடிப்படையில்

வருகிற 11.12.18 அன்று காலை மதுரை மண்டல அலுவலகத்தின் முன்பாக மாபெரும் போராட்டம் நடத்துவது என்றும், இப்போராட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்ப்பட்ட மாற்றுத் திறனாளிகளை பங்கேற்க செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இத்தகவலை P.செல்வநாயகம் – மாவட்ட தலைவர்,  S.பகத்சிங் – மாவட்ட செயலாளர், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பாக தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்;- அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!