பசும்பொன்னில் 414 பயனாளிகளுக்கு ரூ.2.92 கோடி நலத்திட்ட உதவி…

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் தேவர் குரு பூஜையையொட்டி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.  இந்த விழாவிற்கு விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார்.  மாவட்ட வருவாய் அலுவலர் முத்து மாரி வரவேற்றார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் படத்தை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார். வருவாய் துறை சார்பில் 55 பேருக்கு ரூ.6,66,000 உதவித் தொகை, 18 பேருக்கு ரூ.18,00,000 வீட்டு ஒப்படைப்பு , மாவட்ட தொழில் மையம் சார்பில் 117 பேருக்கு 1,58, 99, 190 வங்கி கடன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 200 பேருக்கு 59,97,600 சுய உதவிக்குழு சுழல் நிதி, மாவட்ட ஊரக வளர் முகமை மூலம் 4 பேருக்கு 6,80,000 பிரதமர் ஆவாஷ் யோஜனா திட்டம் . தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் 20 பேருக்கு 42,00,000 அனனவருக்கும் வீடு கட்டும் திட்டம் என 414 பயனாளிகளுக்கு ரூ.2,92,42, 790 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் உதயகுமார், மணிகண்டன், கதர்
வழங்கினர்.

தேவர் உருவம்.பொறித்த தபால் தலை வெளியிடப்பட்டது. தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வர்ராஜா, முதுகுளத்தூர் சட்டசபை உறுப்பினர் பாண்டி ஆகியோ வாழ்த்துரை வழங்கினர். ராஜ்சபா முன்னாள் எம்.பி., நிறை குளத்தான், மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமி உள்பட பலர் பங்கேற்றனர். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை நன்றி கூறினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image