111வது ஜெயந்தி – பசும்பொன்னில் தேவர் சிலைக்கு தமிழக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் மரியாதை …

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் 111 வது ஜெயந்தி, 56 வது குருபூஜை விழாவை முன்னிட்டு தேவர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் , பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கைத்தறி மற்றும் துணி துறை அமைச்சர் ஓ எஸ் மணியன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், தகவல் தொழில்.நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் , கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் பாஸ்கரன் , மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் மற்றும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா ஆகியோர் அரசு சார்பில் நேற்று காலை மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன், பழனி, எஸ். தங்கவேல், ராமச்சந்திரன், மாவட்ட அதிமுக செயலளார் முனியசாமி, மாநில மகளிரணி செயலாளர் கீர்த்திகா முனியசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்த்தீபன், செந்தில்நாதன், பிஜிலா சத்யானந்த், முன்னாள் அமைச்சர்கள் சுந்தர்ராஜ், கே.பி.முனுசாமி, ராஜகண்ணப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது: தேவர் ஜெயந்தி விழா எம் ஜி ஆர் ஆட்சி காலத்தில் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டு இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது. எம் ஜி ஆர் ஆட்சி காலத்தில் ராமநாதபுரத்தை பிரித்து சிவகங்கை மாவட்டத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டப்பட்டது. மக்களுக்காக உழைத்து மறைந்த மாமனிதர், தேவர் புகழ் நிலைக்க அவரது சிலைக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா அதிமுக சார்பில் தங்க கவசம் அணிவித்து பெருமை சேர்த்தார் என்றார்.

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவர் கூறியதாவது: முத்துராமலிங்கத்தேவர் பிறந்த ஊரான பசும்பொன்னில் நினைவிடம், தேவர் சிறைபிடிக்கப்பட்ட மதுரை கோரிபாளையத்தில் 16 அடி உயர சிலை அமைத்தது, கமுதி, உசிலம்பட்டி (மதுரை), மேலநீலிதநல்னூர் (திருநெல்வேலி) ஆகிய இடங்களில் தேவர் கல்தூரி, முக்குலத்தோர் பட்டியலில் தேவர் சமூகத்தை சேர்த்து மிகவும் பின் தங்கியோர் என பிரிவை ஏற்படுத்தி பெருமை சேர்த்தது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு என்றார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் ஐ. பெரியசாமி (திண்டுக்கல்), சாத்தூர் ராமச்சந்திரன், (அருப்புக்கோட்டை), தங்கம் தென்னரசு (திருச்சுழி), , பெரிய கருப்பன் (திருப்பத்தூர்), டி ஆர் பி ராஜா (மன்னார்குடி) , மூர்த்தி (மதுரை கிழக்கு) , மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன்,, முன்னாள் எம்எல்ஏ முருகவேல், முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தேசிய செயலர் ராஜா, மாநில துணை தலைவர் சுப.நாகராஜன், குப்புராமு, அரச குமார், மாவட்ட தலைவர் முரளிதரன், மாவட்ட செயலாளர் ஆத்ம கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கொள்கை பரப்பு செயலாளர் தங்கத் தமிழ்செல்வன், முன்னாள் அமைச்சர் வது நடராஜன், அமைப்பு செயலாளர்கள் முனியசாமி, கவிதா சசிகுமார், மாவட்ட செபலாளர் வது ந ஆனந்த், டாக்டர் முத்தையா, மண்டபம் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

மதிமுக பொது செயலர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே- வாசன், மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், முக்குலத்தோர் பாசறை நிறுவனர் சிற்றரசு, முக்குலத்தோர் புலிப் படை நிறுவனர் கருணாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர் பாண்டியன், மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் சேதுராமன், பொதுச் செயலாளர் எஸ்.ஆர்.தேவர் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முதுகுளத்தூர் சட்டசபை உறுப்பினர் மலேசியா பாண்டியன், மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் குட்லக் ராஜேந்திரன், நகர் தலைவர்கள் கோபி (கோபி), அப்துல் அஜீஸ் (பரமக்குடி) உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.