கீழக்கரையில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய சட்ட விழிப்புணர்வு முகாம்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நேற்று(28/10/18) சட்ட விழிப்புணர்வு முகாம் கேம்பஸ் ப்ரண்ட் மாவட்ட தலைவர் பதுர்ஜமான் தலைமையில் நடைபெற்றது.

இதில் கேம்பஸ் ஃப்ரண்ட் நகர் தலைவர் காதர் முகைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். SDPI கட்சியின் கீழக்கரை நகர் தலைவர் கீழை அஸ்ரப் மற்றும் கேம்பஸ் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் முகம்மது நிஜாம் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் அப்துர ரஹ்மான், வழக்கறிஞர் முகம்மது நதீம் ஆகியோர் சட்ட விழிப்புணர்வு பற்றி சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள், ஜமாத்தார்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.