வைகை அணை சாலை, தொடரும் போக்குவரத்து நெரிசல்..

தேனி மாவட்டம் பெரியகுளம் வைகை அணை சாலை போக்குவரத்து சிக்னலில், சிக்னல் செயல்பாடு இல்லாததாலும், போக்குவரத்து போலிசார் பாதுகாப்பு பணியில் இல்லாததாலும் தனியார் பஸ் டிரைவர்கள் சிலர் தாங்கள் முந்திச் சென்று டிக்கட் ஏற்றுவது சம்மந்தமாக வாய் தகராறு ஏற்படுவது அன்றாட நிகழ்வாகி வருகிறது.  இத்தகறாரின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.

இன்றும் (26/10/2018) இது போன்ற சம்பவத்தினால் தேனி, பெரியகுளம் சாலை, பெரியகுளம் வைகை அணை சாலை போன்ற நகரின் பிரதான சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. பின்பு விடுப்பில் இருந்த தென்கரை காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் மாரிமுத்து விடுப்பில் இருந்த அவர் தாமாக முன் வந்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்தினார். இவரின் செய்கையை பொதுமக்கள் பலரும் பாராட்டினர், இருப்பினும் போக்குவரத்து போலீசார் பணியில் இப்பகுதியில் இல்லாததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் போதிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் பொதுமக்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

சாதிக் பாட்சா, நிருபர், தேனி மாவட்டம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..