இராமநாதபுரம் அறிவியல் கண்காட்சி சிறந்த படைப்புகளுக்கு பரிசு ..

இராமநாதபுரம் மாவட்டம் பள்ளிக்கல்வித் துறை சார்பில் 46வது ஜவஹர்லால் நேரு அறிவியல் மற்றும் கணித சுற்றுப்புற கண்காட்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர், மேல் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் நடைபெற்றது.

பள்ளிகளில் முதலிடம் பிடித்த மாணவர்கள் 12/10/2018 அன்று ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம் கல்வி மாவட்ட அளவில் நடந்தது. இதில் 256 பள்ளிகளில் இருந்து அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன .இதில் 950 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர் . 5 பிரிவுகளில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர் களுக்கு பரிசளிப்பு விழா முகமது சதக் தஸ்தகிர் மெட்ரிக் பள்ளியில் நடந்தது.

மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார். மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் வழங்கினார். அவர் பேசியதாவது, “மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 14 வரை இலவச கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது. 2016 தேர்தல் அறிக்கையில் அறிவித்த தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் துவங்கி வைக்க உள்ளார். விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் கீழ் 2011 ஆம் ஆண்டு முதல் மாநிலத்தில் இதுவரை 38. 53 லட்சம் மாணவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் அனைத்து கிராமங்களையும் இணையம் வழியாக ஒருங்கிணைக்கும் நோக்கில் ஆப்டிகல் பைபர் கேபிள் தொழில் நுட்பத்தில் தமிழகத்தில் முதற்கட்டமாக 12,545 கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்ட செயல்பாட்டிற்காக மத்திய அரசிடம் ரூ. 3,500 கோடி நிதி கோரப்பட்டுள்ளது. இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் பட்சத்தில் மக்கள் இருந்த இடத்திலேயே அரசின் அனைத்து திட்டங்களையும் இணையம் வாயிலாக சிரமமின்றி பெற்று பயனடையலாம் என்றார். முதன்மை கல்வி அலுவலர் முருகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் பிரேம் ( ராமநாதபுரம், ராமர் (பரமக்குடி), பால தண்டாயுதபாணி (மண்பம்), செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, ஆசியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேள்ளனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..