Home செய்திகள் பழமை மற்றும் முன்னோர்களின் வாழ்வியலை மாணவர்களுக்கு புகட்டும் அல்பய்யினா மெட்ரிக் பள்ளி.

பழமை மற்றும் முன்னோர்களின் வாழ்வியலை மாணவர்களுக்கு புகட்டும் அல்பய்யினா மெட்ரிக் பள்ளி.

by ஆசிரியர்

அல்பய்யினா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ, மாணவிகளின் வாழ்வியல் முறையை ஒழுங்குபடுத்தும் வகையில்  பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.  அதன் வரிசையில் “ANCIENT DAY” எனுப்படும் “முன்னோர்கள் தினம்” கொண்டாடப்பட்டது.

இது பற்றி பள்ளியின் நிர்வாகி கூறுகையில்,  “பாரம்பரியத்தைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது மார்க்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, மேலும் இதைப் பற்றி  அறிஞர்கள் இதுவும் ஒரு வகையில் இறைவனின் தூதர் காட்டிய வழி என கூறுகிறார்கள்.

அதேவேளையில் அரேபியர்களை பொறுத்தமட்டில் குறைந்தது பத்து தலைமுறையாவது அறிந்து வைத்திருப்பது வழக்கமாக இருந்தது. மேலும் ஆய்வறிக்கையின்படி பாரம்பரியத்தை கற்றுக்கொடுத்து வளர்க்கக்கூடிய பிள்ளைகளிடத்தில் அதிகமாக பெரும் தவறுகள் செய்வது குறைவாகவே காணப்படுகின்றது.

ஆனால் வேகமாக வளர்ந்து வரக்கூடிய இன்றைய நவீன காலகட்டங்களில் இளம் தலைமுறையினருக்கு இந்த பாரம்பரியத்தைப் பற்றி கற்றுக் கொடுக்கக்கூடிய கலாச்சாரம் அதிகமாக மறைந்து வருவது காணமுடிகிறது.

எனவே இதை சரியாக கண்டறிந்து இதற்கு தீர்வை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்,  அல்பய்யினா பள்ளிக்கூடத்தில் “ANCIENT DAY”  என்ற “முன்னோர்கள் தினம்” ஏற்பாடு செய்யப்பட்டது.  மேலும் இந்நிகழ்வுக்காக பள்ளி மாணவ, மாணவியர்கள் தங்களுடைய வீட்டில் உள்ள பழமையான பொருட்களை மற்றும் பெற்றோர்களின் உதவியுடன் தங்களுடைய தலைமுறையினரின் பெயர் பட்டியலையும்,  புகைப்படங்களையும் ஆவணப்படுத்தியிருந்தது, இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவ, மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக தாங்கள் சேகரித்த பொருட்களை பார்வைக்காக கொண்டு வந்திருந்தார்கள். இது போன்ற நிகழ்வில் பயிலும் மாணவ, மாணவிகளை ஈடுபடுத்தும் அல் பையினா மெட்ரிகுலேஷன் பள்ளியின் முயற்சி நிச்சயமாக பாராட்டுமலுக்குரியதாகும்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!