Home செய்திகள் கீழக்கரையில் ஹைமாஸ் விளக்கால் பல லட்சம் வீணாகி வரும் அவலம்.. முன்னாள் நகர்மன்ற உறுப்பினரின் ஆதங்கம்..

கீழக்கரையில் ஹைமாஸ் விளக்கால் பல லட்சம் வீணாகி வரும் அவலம்.. முன்னாள் நகர்மன்ற உறுப்பினரின் ஆதங்கம்..

by ஆசிரியர்

கீழக்கரையில் ₹.5 லட்சம் செலவில் 9 இடங்களில் உயர் கோபுர விளக்கு எனும் ஹைமாஸ் லைட்டுகள் கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக நகரெங்கும் வைக்கப் பட்டது, ஆனால் தற்சமயம் எந்த பராமரிப்பும் இல்லாமல், வைத்த இடங்கள் எல்லாம் இருளடைந்து, மக்களின் வரிப்பணம் வீணாகி வருகிறது.

இது சம்பந்தமாக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் லாஹித்கான் கூறுகையில், “இந்த ஹைமாஸ் விளக்கு வைத்த புதிதில் சிறு சிறு குறைகள் வந்தாலும் 3 மாதங்களுக்குள் நிவர்த்தி செய்து வந்த நகராட்சி நிர்வாகம், கடந்த 1 வருட காலமாக ஹைமாஸ் விளக்குகளின் பராமரிப்பை  ஒரேடியாக நிறுத்தி விட்டது போலவே தோன்றுகிறது. ஊரில் உள்ள அனைத்து விளக்குகளும் ஒவ்வொன்றாய் பழுதாகி தற்போது எதுவும் வேலை செய்யாது இடத்தை அடைத்து வெறும் கூடாகவே நிற்கிறது.

தெற்குத்தெரு பள்ளி வாசல் அருகே அமைக்கப்பட்ட விளக்கு எரிந்து பல மாதங்கள் ஆகிறது. பல புகார்கள் தந்தும் பலனில்லை என்பதால் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து கடந்த 16.08.18 அன்று மெழுகுவர்த்திகள் ஏந்தி போராட்டம் நட.தினோம். அதற்கும் நகராட்சி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. இதற்கிடையில் செக்கடி அருகே இன்னொரு ஹைமாஸ் விளக்கு அமைத்து மக்கள் சீரழிந்தாலும் கவலைப்படாமல், அமைச்சர் வரவிற்காக காத்துகிடக்கின்றனர். இதற்கு தீர்வு காணும் விதமாக நீதிமன்றம் சென்று நியாயம் கேட்க உள்ளேன்” என கூறி முடித்தார். தகவல்: மக்கள் டீம்..

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!