அரசு பள்ளிகளின் அவலநிலை.. கண்டு கொள்ளுமா அரசாங்கம்..??

இந்தியாவின் இதயம் கிராமங்களில் உள்ளது என்றார் காந்தி. தமிழகம் மட்டுமல்ல நாட்டின் பல பகுதிகளிலும் கிராமங்களில் உள்ள திறமை மிகுந்த குழந்தைகள் பெரும்பாலும் அரசு பள்ளிகளையே நம்பி உள்ளனர்.

ஆனால் தனியார் பள்ளிகளை ஒப்பிடுகையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் ஆண்டு தோறும் குறைந்து வருவது தான் அதிர்ச்சியூட்டும் தகவல்.

L.K.G படிப்புக்கு கூட மாதத்திற்கு ஆயிரகணக்கில் பணத்தை கறக்கும் பள்ளிகளை தேடி செல்லும் அளவுக்கு நமது கிராம மக்களின் பொருளாதார நிலை ஒன்றும் உயர்ந்து விடவில்லை. ஆனாலும் விண்ணப்பம் வாங்குவதற்கே விடிய,விடிய பள்ளி வாயில்களில் காத்திருக்கும் நிலையை காணமுடிகிறது.

குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தரமான கல்வியை தரவேண்டும் என்ற கட்டாயத்தின் வெளிப்பாடு தான் இது என்பதின் ஐயமில்லை. ஆசிரியர் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டும் சேர்க்கை உயர்ந்து விடபோவதில்லை.

மாறாக பிரச்சினையே குழந்தைகளின் எதிர்கால நலன் குறித்து பெற்றோருக்கு உள்ள அச்சமும், அரசு பள்ளிகள் மீதான அவ நம்பிக்கையுமே. அரசு பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் மட்டுமின்றி, அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் கூட தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வருவதில்லை.

ஏன் என்றால் சுகாதாரமற்ற நிலை?

இது போன்ற சூழலில் கிராமப்புற சாதாரண மக்கள் மட்டும் அரசு பள்ளிகளை நாடி வரவேண்டும் என எதிர்பார்ப்பது நகைப்புக்குரியது.

ஏன் இந்த அவல நிலை???

இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணமாக சுகாதாரத்தை சுட்டி காட்டுகிறார்கள் பொதுமக்கள்..

ஏன் கண்டும் காணாமல் இருக்கிறது அரசு??

கல்வியில் ஏன் இந்த அலட்சியம்??

அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் 80 விழுக்காடு ஏழை எளிய மக்கள் என்பதாலா???

சுகாதாரமற்ற முகம் சுழிக்கும் அவல நிலை. பல அரசு பள்ளிகளின் நிலையும் இதுதான் அதில் ஒன்று இதோ, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் வட்டம் எள்ளேரி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் நிலையை பாருங்கள்…

1. பள்ளியை சுற்றி கருவேல மரங்கள்..

2. குப்பை மேடாகும் பள்ளி வளாகம்..

3. பழுது பார்க்காத கட்டிடங்கள்..

4. பல வருடங்களாக வண்ணம் தீட்டப்படாத அழுக்கான கட்டிடங்கள்,

5. காய்ந்த சருகுகள்,புல் ,சிறிய புதர்கள் நிரம்பிய வளாகங்கள்,

6. பராமரிக்கப்படாத மாணவர்கள் கழிப்பறைகள்….

7. பார்த்தாலே அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் சமையல் அறை..

இவை பெரும்பாலான அரசுப்பள்ளிகளின் இன்றைய அடையாளங்களும் இதுவாகவே இருந்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

என்று மாறும் இந்த அவல நிலை..

இந்த அவல நிலையில் இருந்து எப்போது கிடைக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சுதந்திரம்…

இந்நிலை நீடித்தால் நமது கிராமத்தின் அரசு பள்ளி எதிர்காலத்தில் தொடர்ந்து இயங்குவது கேள்விக்குறியே?

மாணவர் இல்லா பள்ளியில் ஆசிரியருக்கு என்ன வேலை?

ஆசிரியர் இல்லா பள்ளியில் சங்கங்களுக்கு என்ன வேலை?

ஊதிய முரண்பாடுகள், பணிச்சுமை போன்ற வழக்கமான கோரிக்கைகளை தாண்டி ஆசிரியர்கள் போராட வேண்டிய உண்மையான பிரச்சனைகள் பல நம் கண்முன் உள்ளன.

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர்கள் சங்கம் நினைத்தால் இந்த நிலையை மாற்ற முடியும்.

இது நாளைய நம் சந்ததிக்கானது …

இந்த பயணம் கடினமானது என்றாலும் இலக்கு ஒன்றே வெற்றி …

ஒற்றுமையோடு பயணிப்போம்.

மக்கள் அனைவரும் மகன் / மகளின் எதிர்கால கல்வியை கருத்தில்கொண்டு தனியார் பள்ளிகளை தேடி செல்கிறார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை.. இந்த  அசுத்தமான நிலையில் இருக்கும் அரசு பள்ளிகள் நிலையை உயர்த்த அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி கல்வித்துறை முன் வரவேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தியாளர்:-  அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..