நெல்லை மாவட்டத்தில் குளம் போன்று காட்சியளிக்கும் குலையநேரி அரசு உயர் நிலைப்பள்ளி…

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள குலையநேரியில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. தற்போது அதிகமான மழை பொழிந்து வரும் வேளையில் மழைநீர் வெளியேறுவதற்கு போதுமான வசதி இல்லாததால் பள்ளியினுள் பெருகி குளம் போன்று காட்சியளிக்கிறது.

இந்த நிலையே நீடிப்பதால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் இப்பள்ளியில் இருக்கும் இந்த நிலையை கவனித்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..