கீழக்கரை அருகே பஸ் கார் நேருக்கு நேர் மோதி விபத்து – 3பேர் பலி..

இராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசு பேருந்தும் சிவகாசியிலிருந்து ராமநாதபுரம் வந்த காரும் சாயல்குடி அருகே கீழச்செல்வனூர் போலீஸ் ஸ்டேஷன் அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் கீழக்கரை அருகே மாயாகுளம் பாரதி நகர் அருண் 20, உமய பாலா 18, விஜயராஜ் 18 ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் கீழக்கரை மாயாகுளம் நவீன் 19, உமயகணேஷ் 20, புவனேஸ்வரன் 16, கிருஷ்ணகுமார் 23, கமல்ராஜ் 28, வேல் முனியாண்டி 36, மோகன் 30 மற்றும் அரசு பஸ் டிரைவர் கிருஷ்ணன் 55 ஆகியோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் துரிதமாக மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டு வரப்பட்டனர். படுகாயமடைந்த கிருஷ்ணன் உள்பட 5 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். லேசான காயமடைந்த 3 பேர் முதலுதவிக்கு பின் வீடு திரும்பினார் பலியானவர்களின் உடல்கள் கடலாடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சிவகாசியில் இருந்து பட்டாசுகள் வாங்கி திரும்பியபோது விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது. விபத்திற்கான காரணம் குறித்து கீழச் செல்வனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இவ்விபத்தில் இறந்தவர்களின் உடல் கீழக்கரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது, 4 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…