தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச்சாரல் விழா..

தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கல்வித் தந்தை பி.எஸ்.அப்துர் ரஹ்மான் 91வது பிறந்ததினம் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் 87வது பிறந்ததினத்தையும் முன்னிட்டு இலக்கியச்சாரல் விழா இனிதே கொண்டாடப்பட்டது. 15.10.2018 அன்று காலை 10.30 மணியளவில் இறை வணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் வே.அகிலா வரவேற்புரை வழங்கினார். ஹாஜியானி. குர்ரத் ஜமீலா அறங்காவலர், சீதக்காதி அறக்கட்டளை சென்னை தலைமையுரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். சுமையா வாழ்த்துரை வழங்கினார். ஜமால் அமீர் சுல்த்தான் தலைவர், சர்வதேச இஸ்லாமியச் சங்கம், முன்னாள் தலைவர், தமிழ் பண்பாட்டுக் கழகம் ஹாங்காங் அவர்கள் வாழத்துரை வழங்கியதோடு தனது அறக்கட்டளையின் சார்பில் கல்லூரி மாணவிகளுக்கு ரூபாய் 50,000 கல்வி உதவித் தொகை வழங்கி சிறப்பித்தார். திரு.த.இராமலிங்கம் வழக்கறிஞர் சென்னை உயர்நீதி மன்றம், சென்னை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதில் இலக்கியத்தில் வாழ்வியல் சிந்தனைகளைப் பற்றிய கருத்துகளை மாணவிகளுக்குக் கூறினார். மேலும் இவ்விழாவில் அறிவியலால் நாம் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா? என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புப் பட்டிமன்றத்திற்கு நடுவராகவும் அமர்ந்து தீர்ப்பு வழங்கி விழாவை சிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து அழகப்பா பல்கலைக்கழக இணைவுப் பெற்ற கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 3000மும் இரண்டாம் பரிசாக ரூபாய் 2000மும் மூன்றாம் பரிசாக ரூபாய் 1000மும் வழங்கப்பட்டது. ஆறுதல் பரிசாக புத்தகங்களும் வழங்கப்பட்டது.

மேலும் பல்வேறு கல்லூரிகளிலிருந்தும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள். இறுதியாக தமிழ்த்துறை உதவிப்பேராசிரியை இரா.விசாலாட்சி நன்றியரை வழங்க நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறையுற்றது. இந்நிகழச்சிக்கான ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளையின் துணைப் பொது மேலாளர் சேக் தாவூதுகான் மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்களும் செய்திருந்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..