Home செய்திகள் கீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..

கீழக்கரை முகைதீனியா பள்ளியில் “BRAIN RAIN 2018” அறிவியல் கண்காட்சி..வீடியோ காட்சிகள்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெரு முஹைதீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு “BRAIN RAIN 2018” என்ற அறிவியல் கண்காட்சி Dr.APJ.Abdul Kalam Science Forum  அமைப்புடன் இணைந்து  15/10/2018 மற்றும் 16/10/2018 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இக்கண்காட்சியை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் திறந்து வைத்தார்.  இந்த நிகழ்ச்சிக்கு  சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் தாசில்தார் தமீம்ராசா கலந்து கொண்டார்.

இக்கண்காட்சியில் 600கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.  இக்கண்காட்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் வருகையாளர்களுக்கு அழகிய முறையில் தங்களுடைய படைப்புகளைப் பற்றி அழகுற விவரித்தனர்.

இக்கண்காட்சியில் கலாம் ஏவிய விண்கலம், பாம்பன் பாலம், விவசாயம், விண்கோள்கள் மற்றும் இன்னும் பல அறிவியல் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

மேலும் இன்று (16/10/2018) மாலை முதல் பெற்றோர்களும், பொதுமக்களும் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். அதில்  பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டு சென்றனர்.

மேலும் இந்த கண்காட்சிக்கு பள்ளி தாளாளர் மௌலா முகைதீன் தலைமையில் துணை தலைவர் MMS முகைதீன் இபுராஹிம், அறிவியல் குழு தலைவர் சாதிக் ரபீக், துணை செயலாளர் முகம்மது ரஃபீக், டாக்டர் ராசீக்தீன், பொருளாளர் பஷீர் அகமது மற்றும் பல கல்விக்குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

மேலும் ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம்,செயலாளர் ஹசன்,பொருளாளர் முனியசங்கர் மற்றும் பல அமைப்பு நிர்வாகிகள்  கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளின் படைப்புகளை பார்வையிட்டு மாணவ, மாணவிகளை வாழ்த்தினர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!