நெல்லை மாவட்டம் சுரண்டையில் புத்தக திருவிழா..

நெல்லை மாவட்டம் சுரண்டையில் மகாத்மா காந்தியின் 150 வது நினைவு தினத்தை முன்னிட்டு சத்யா ஏஜென்சி சார்பில்  2-வது புத்தக திருவிழா 6/10/18 முதல் 15/10/18 வரை நடைபெற்று வருகிறது.

இப்புத்தக திருவிழாவில் உலகின் பல்வேறு அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள், அறிவியலாளர்கள், தலைசிறந்த எழுத்தாளர்களின் ஏராளமான புத்தகங்கள் காட்சிபடுத்தப்பட்டது. இந்த புத்தக திருவிழாவில் ஆசிரியர்கள்,பள்ளி கல்லூரி மாணவர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள்,சிறுவர் சிறுமியர்கள் என அதிகமான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் கோவிலாண்டனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு பல கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். இப்பள்ளி மாணவ மாணவியர்களின் நிகழ்ச்சிகள் அனைத்தும் புத்தகவாசிப்பையும், கல்வியையும் மையமாக கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சிறிய குழந்தைகளின் நிகழ்ச்சிகள் இப்புத்தக திருவிழாவிற்கு மேலும் அழகு சேர்க்கும் வகையிலும், அமைந்திருந்தது.

தகவல்:-அபுபக்கர்சித்திக்

செய்தி: அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர்

( பூதக்கண்ணாடி மாத இதழ்)- கீழை நியூஸ்

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..