Home செய்திகள் இராமநாதபுரம் காட்டுபிள்ளையார் கோயிலில் நவராத்திரி விழா..

இராமநாதபுரம் காட்டுபிள்ளையார் கோயிலில் நவராத்திரி விழா..

by ஆசிரியர்

இராமநாதபுரம் காட்டுப் பிள்ளையார் கோவில் ஐயப்பன் கோயில் பிரமோற்சவம், நவராத்திரி விழா 09.10.18 இல் காப்பு கட்டு, முளைப்பாரி முத்து பரப்புடன் 10 நாள் விழா தொடங்கியது. இதனை முன்னிட்டு தினமும் இரவு சிறப்பு தீபாராதனைக்கு பிறகு, பெண்களின் கும்மியாட்டம் நடக்கிறது.

நான்காம் நாளான 12.10.18 இரவு 6:30 மணியளவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான மகளிர் குழுக்கள் கலந்து கொண்டனர். 19.10.18 விஜயதசமி அன்று ஐயப்பன் சுவாமி வீதியுலா சென்று, மகர் நோன்பு திடலில் அம்பு விடும் வைபவம் நடைபெறும் என கோயில் அர்ச்சகர் கோபாலகிருஷ்ண அய்யர் தெரிவித்தார்.

அக்.18 சரஸ்வதி பூஜையையொட்டி பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை ஐயப்ப குருசாமிகள் தலைமையில் ஐயப்ப பக்தர்கர் செய்துள்ளனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!