
கீழக்கரை 20வது வார்டு வடக்குத் தெரு முக்கிய நடை பாதை பகுதியல் ஒரு வாரங்களுக்கு முன்பு அடைப்புகளை நீக்க உடைக்கப்பட்ட மூடிகள் சீர் செய்யப்படாமலும், வாய்க்காலில் இருந்து அள்ளப்பட்ட சாக்கடை கழிவுகளும் நீக்கப்படாமல் இலவசமாக நோய்களை பரப்பிக் கொண்டிருக்கிறது.
அப்பகுதி மக்கள் நகராட்சி பணியாளர்களிடம் பல முறை எடுத்து கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகமான குழந்தைகள் விளையாடும் பகுதியாக இருப்பதால் பெற்றோர்கள் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை மிகவும் பயத்துடனே வெளியே அனுப்புகிறார்கள்.
எதாவது அசம்பாவிதம் நடக்கும் வரை நகராட்சி நிர்வாகம் காத்திருப்பது போல் தோன்றுகிறது.