முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் வாணி கிராமம் மற்றும் கலாம் நகரில் மரம் நடுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 12/10/2018 அன்று காலை 11.00 மணியளவில் மரம் நடுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய சக்கரக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட வாணி கிராமம் மற்றும் கலாம் நகரில் ஆகிய கிராமங்களில் நடைபெற்றது. 

முகம்மது  சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் A.R . நாதிரா பானு கமால் மற்றும் திருமதி உம்முல் ஜாமியா, ஆணையாளர் இராமநாதபுரம் மற்றும் R.S. விமல்ராஜ் ஊராட்சி செயலர், சக்கரக்கோட்டை   ஆகியோர் மரம் நடுதல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள். 

இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள், பேராசிரியர் மற்றும் வாணி கிராம பொதுமக்கள் மரம் நடுதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து திருமதி. உம்முல் ஜாமியா ஆணையாளர், மரம் நடுதல் மற்றும் மரத்தின் நன்மைகள் பற்றி விழிப்புணர்வு மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து மாணவி M.அபிநயா மற்றும் மாணவி சௌமியா மரம் நடுதல் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். 

இறுதியாக மு.கோகிலா தேவி தமிழ்த்துறை தலைவர் மற்றும் உதவி பேராசிரியர்  “வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்” என்ற பழைய நிலை மாறி புதுமொழியாக “ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்” என்று சொல்லும் நிலைக்கு வந்துவிட்டோம், என்றும் மரம் நடுதல் நிகழ்வு தொடர்ந்து நடைபெறாவிட்டால் தமிழ்நாடு பத்து ஆண்டுகளில் பாலைவனமாகும் என்று ஆய்வுகள் எச்சரிக்கிறது, என்று பொதுமக்களுக்கும், மாணவிகளுக்கும், எடுத்துக்கூறி இந்நிகழ்ச்சி இனிதே முடிவடைந்து. 

அதனை தொடர்ந்து முகம்மது சதக் ஹமீது மகளிர்கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாலை 3.00  மணியளவில் இக்கல்லூரியின் முதல்வர், அலுவலக பணியாளர்கள், பேராசிரியர் மற்றும் மாணவிகள் மரம் நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.