திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளியில் சேதுபதி கோட்டைகள் புகைப்பட கண்காட்சி..

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் ‘சேதுபதி கோட்டைகள்’ புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. ஒன்பதாம் வகுப்பு மாணவன் பு.தர்மபிரபு வரவேற்றார்.

மேலும் மன்ற பொறுப்பாசிரியர் வே.ராஜகுரு திறந்து வைத்தார். கமுதி, செங்கமடை ஆறுமுகக்கோட்டை, ராமநாதபுரம், திருமயம், திருப்புல்லாணி பகுதிகளில் உள்ள கோட்டைகளின் புகைப்படங்கள் காட்சியில் இடம் பெற்றன. கோட்டைகள் உருவான வரலாறு குறித்து மாணவ, மாணவிகள் ச.பிரியதர்ஷினி, ஜெ.சுகுணா, மு.பேச்சியம்மாள், ம.வினோதினி, அ.முகமது லபிப், கு.யோகாஸ்ரீ கூறினர்.

ஏழாம் வகுப்பு மாணவி வி.டோனிகா நன்றி கூறினார். ஆறாம் வகுப்பு மாணவி ஜீ.ஹரிதா ஜீவா தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர்கள் கிருஷ்ணவேணி, தனலட்சுமி மாணவர்கள் சுதர்ஸன், முஜிபு ரகுமான் ஆகியோர் செய்திருந்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Be the first to comment

Leave a Reply