கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் “JOY OF GIVING WEEK”..

கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல் நிலைப் பள்ளி சார்பில் “JOY OF GIVING WEEK” முள்ளுவாடி கிராமத்தில் கொண்டாடப்பட்டது. தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துரை சார்பில் “JOY OF GIVING WEEK” என்ற நிகழ்வாக, ஹமீதியா ஆண்கள் மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் முள்ளுவாடி கிராம அங்கன் வாடி மையக் குழந்தைகளுக்கும், அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் பிஸ்கட் பாக்கெட்டுகளை வழங்கினர்.

பதிலுக்கு தொடக்கப் பள்ளி மாணவர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். மாணவர்களிடையே ஈகை மனப்பான்மையை உருவாக்கும் விதமாக அமைந்த இந்நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது.

Be the first to comment

Leave a Reply