நிலக்கோட்டையில் வீணாகும் குடிநீர்..

நிலக்கோட்டையில் நெடுஞ்சாலை துறையினரால் சாலை விரிவாக்கப் பணிக்காக சாலையை தோண்டியபொழுது மகளிர் காவல் நிலையம் எதிரே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

கடந்த ஒரு வார காலமாக இந்த உடைப்பில் நீர் வெளியேறி வீணாகிக் கொண்டிருக்கிறது. பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் அதிகாரிகள் வந்து பார்வையிட்டும், குழாய் உடைப்பினை சரி செய்யவில்லை. இதன் காரணமாக நிலக்கோட்டையில் இருந்து சுமார் 10 கிராமங்களுக்கு மேல் செல்ல வேண்டிய குடிநீர் சரியான முறையில் விநியோகம் செய்ய முடியவில்லை.உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைபட்ட குடிநீர் குழாய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ் டி பி ஐ கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..