Home செய்திகள் இலங்கை வசமுள்ள தமிழக படகுகள் நிலை ஆய்வுக்குழு அதிர்ச்சி..

இலங்கை வசமுள்ள தமிழக படகுகள் நிலை ஆய்வுக்குழு அதிர்ச்சி..

by ஆசிரியர்

இலங்கை கடற்படையினரால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பறிமுதல் செய்யப்பட்ட 184 தமிழக படகுகளை இலங்கை நீதிமன்றங்கள் ஆகஸ்ட் மாதம் விடுவித்தது. விடுவித்த படகுகளை தமிழக மீன் வளத்துறை கூடுதல் இயக்குநர் ஜானி டோம் வர்கீஸ் தலைமையில் மீன்துறை அதிகாரிகள், மீனவ சங்க பிரதிநிதிகள் 16 பேர் அடங்கிய குழு பார்வையிடுவதற்காக 10.10. 2018 இல் இலங்கை சென்றனர்.

நேற்று (11/10/2018) காலை காரை நகர் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த 107 படகுகளை பார்வையிட்டனர். அதில் 20 படகுகளை மட்டுமே தற்போது மீட்கும் நிலையில் உள்ளன. எஞ்சிய படகுகள் பலத்த காற்று, கடல் கொந்தளிப்பால் ஒன்றுடன் ஒன்று மோதி முற்றிலும் சேதமடைந்துள்ளன.  படகுகளின் நிலை கண்டு மீனவர் ஆய்வுக்குழு வேதனை அடைந்தனர். காங்கேசன், கிராஞ்சி, மன்னார், கல்பட்டி துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளை இரண்டு நாட்களில் பார்வையிட்டு திரும்ப உள்ளனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!