சாயல்குடி அமுமுக பிரமுகருக்கு வெட்டு..

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் எம்.பி. பாண்டியன். சாயல்குடி அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய அவைத் தலைவராக உள்ளார். சாயல்குடியில் இவரது மகன் டூ வீலர் ஷோரூம் வைத்துள்ளார்.

இன்று மாலை இங்கு பாண்டியன் அமர்ந்திருந்தார்.  அப்போது கைலி கட்டிய 2 பேர், பேன்ட் அணிந்த ஒருவர் என அடையாளம் தெரியாத 3 பேர் அங்கு வந்தனர். பாண்டியன் தலையில் அரிவாளால் சரமாரியாக தாக்கி விட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

இதில் நிலை குலைந்த பாண்டியனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சாயல்குடி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தாக்குதலுக்கான காரணம் குறித்து சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜோக்கிம் தலைமையில் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.