இராமநாதபுரத்தில் சர்வதேச மனநல தினம்..

இராமநாதபுரம் செஸ்ட் ஏஞ்சலின் மனநலம் குன்றியயோருக்கான காப்பகத்தில் சர்வதேச மன தினம் கடைபிடிக்கப்பட்டது. இராமநாதபுரம் சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான அ. கயல்விழி தலைமை வகித்தார்.

மாவட் சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான வி.ராமலிங்கம் முன்னிலை வகித்தார் காப்பகத்தில் மனநலம் குன்றிய 60 பேருக்கு இனிப்பு வழங்கினார். அனைவருக்கும் இரவு சிற்றுண்டி வழங்கப்பட்டது.

மனநல காப்பக நிர்வாகியிடம் மனநலம் குன்றியோர் பராமரிப்பு குறித்து முதன்மை மாவட்ட நீதிபதி  கயல்விழி கேட்டறிந்தார். மனநலம் குன்றிய மக்களுக்கு தேவையான அனைத்து சட்ட ஆலோசனைகள் சட்ட உதவிகள் மாவட்ட சட்டப்பணிகள்ஆணைக்குழு நிறைவேற்றி தரும் என்பதை எடுத்துரைத்தார். .மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழ ஊழியர்கள்,  சட்ட ன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

 

Be the first to comment

Leave a Reply