கீழக்கரையில் குழந்தை வளர்ப்பு மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்கம் ..

கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியின் மழலையர் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்கு குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வெற்றிப்பாதை வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு பேச்சாளராக கடையநல்லூர் N.K.M.காதர் அலி உரையாற்றினார், மற்றும் இஸ்லாமியா பள்ளியின் தாளாளர் MMK.முஹைதீன் இப்ராகிம் மாணவர்களுக்கு சிறந்த அறிவுரைகளை வழங்கினார்.
இந்த சந்திப்பில் நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.