பிரபல DS பட்டணம் மூக்குப்பொடி பெயரில் போலி மூக்குப்பொடி ….

மதுரை தேனி மாவட்டங்களில் பிபல DS கம்பெனி விற்பனை செய்யும் மூக்குப்பொடி படுஜோராக விற்பனை ஆவதாக வந்த தகவலை அடுத்து அந்த நிறுவனத்தினர் மதுரை மற்றும் தேனி பகுதிகளில் விசாரித்தபோது அந்த இடங்களில் இவர் நியமித்த டீலர்கள் யாரும் இல்லை என்பது தெரிய வருகிறது. இதனையடுத்து மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்களிடம் புகார் கொடுக்கப்பட்டது.

பிரபல மூக்குப்பொடி கம்பெனி உரிமையாளர் ஜெய்சிங் கொடுத்த புகாரையடுத்து மதுரை தெற்குவாசல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையின் போது மதுரை மேல அனுப்பானடியில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் சாதாரண நிறுவனங்களிடம் மூக்குப்பொடியை வாங்கி அதில் டி எஸ் பட்டணம் பொடி என்ற கம்பெனி லேபிள் ஒட்டி விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து போலியாக லேபிலை தாயார் செய்து மூக்குப்பொடி டப்பாக்களை விற்பனை செய்த மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் புதுமாகாளிபட்டியை சேர்ந்த ராம்கார்த்திக் மற்றும் தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்த முத்தழகு ஆகிய 3 பேரை காவல்துறை கைது செய்தனர். இவர்களிடமிருந்து போலி மூக்குப்பொடி தயாரிக்க பயன்படுத்திய மிஷின்கள்,உபகரணங்கள் மற்றும் போலி மூக்கு பொடிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு மதுரை சரக காவல் துறையினர் தனிப்படை அமைத்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய ஒருவரையும் தேடி வருகின்றனர்.

பிரபல நிறுவனத்தின் பெயரில் இது போன்று நடக்கும் போலி விற்பனையை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

செய்தி:- வி.காளமேகம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..