இராமநாதபுரம் கல்வி மாவட்ட விளையாட்டு போட்டிகள் துவங்கின…

தமிழக பள்ளி கல்வித்துறை இராமநாதபுரம் மாவட்டம் சார்பில் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் துவங்கின. கல்வி மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி தொடங்கி வைத்தார். 14, 17, 19 வயதினருக்கான ஹாக்கி, கூடைபந்து, இறகு பந்து, டென்னிஸ், மேஜை பந்து போட்டிகளில் ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை வட்டார போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவியர் மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். போட்டிகளை ஏற்று நடத்தும் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் கண்ணதாசன், உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், ரூபன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்துள்ளனர். மூத்த உடற்கல்வி ஆசிரியர்கள் நாச்சியப்பன், ரமேஷ்பாபு, சேவியர், கிறிஸ்டோபர், சிவக்குமார், பிரபாகரன், ராஜன், செல்வேந்திரன், தினகரன், பூபதி, லூர்துமேரி, ஆரோக்கிய லீமா ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Be the first to comment

Leave a Reply