இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா பறிமுதல் .. மூவர் கைது..

இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேஸ்வரம் அருகே பதுக்கி வைத்திருந்த ரூ ஐந்து லட்சம் மதிப்பிலான 100 கிலோ கேரளா கஞ்சாவை(மூன்று பை) சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். கடத்தலில் தொடர்புடைய பாலா, ஆல்வின் ஆகியோரை கைது செய்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் ஒருவரை கைது செய்தனர். இவர்களிடமிருந் இண்டிகா கார், இரண்டு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேல் விசாரணைக்கா 3 பேரையும் பறிமுதல் செய்த கஞ்சா பொட்டலங்கள், வாகனங்கள் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Be the first to comment

Leave a Reply